திரு.கா.வைதீஸ்வரன்

சுகவாழ்க்கை“ பத்திரிகை ஆசிரியர்

உடல், உள, சமூக, ஆன்மீக மேம்பாடு வழிகாட்டுனர்

சுகநலக் கல்வியாளர், உளவள ஆலோசகர், சமூக சேவையாளார்

 
        2

  Home Geriatrics     Sukavaalkkai.1 Sukavaalkkai.2 Sukavaalkkai.3 Sukavaalkkai.4 Articles EX.BANKERS NORTHERN.BANKERS
  முகப்பு   முதியோர்      சுகவாழ்க்கை.1 சுகவாழ்க்கை.2 சுகவாழ்க்கை.3   சுகவாழ்க்கை.4   கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
 

ஆரோக்கிய வாழ்வு தரும் இனிய கலை

கலாபூசணம்கா.வைதீஸ்வரன்.
“சுகவாழ்க்கை“ மலர் ஆசிரியர்
சுகநலக்கல்வியாளர் உடல்,உள, சமூக
ஆன்மீக மேம்பாடு வழிகாட்டுனர்
(077 3179715, 011 2717401)

 

 
 
 
 
 

 

 

 

 

 

 

 

இன்றைய இயந்திரமான உலகில் மக்கள் தங்கள் உடலைப் பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. மக்களுடைய மனங்களில் ஒரு வித விரக்தி, இறுக்கமான நிலை, உள்ளச் சோர்வு ஏற்பட்டு இறுதியில் உடல் சோர்ந்து விடுகின்றனர்.

 

உடம்பால் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே   - திருமூலர்

 

என்று திருமூலர் நோயற்ற வாழ்வினை வேண்டியுள்ளார். உடலைப் பேணுவதன் மூலமும், மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் ஒருவன் தன் வாழ்க்கையில் எவ்வளவு கடினமான காரியங்களையும் சாதிக்க முடியும்.


யோகம்: இந்து சமயம் உலகிற்கு வழங்கிய அரிய செல்வங்களுள் ஒன்று யோகா. மனிதனின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு நம் முன்னோர்கள் கண்டறிந்த வாழ்க்கை முறையே இது. இதன் சிறப்பினை அறிந்து இன்று உலகெங்கும் யோகாவினைப் பயில்கிறார்கள். விலங்கு நிலையில் வாழ்ந்த மனிதன் படிப்படியாக உயர்ந்து மனித நிலைக்கு வந்தான். தன்னுடைய அறிவாற்றல், தன் உடல், உள்ளம், மூளை, ஆன்மா ஆகியவற்றின் அளவற்ற ஆற்றலை உணர்ந்து, தெய்வ நிலைக்கு உயரும் வழி முறையாக யோக நெறியினை கண்டறிந்தான். 

பொருள்: யோகா. என்றால் ஒன்றாக இணைதல், சேருதல், கூடுதல் இரண்டறக் கலத்தல் என்று பொருள்படும். ஜீவாத்மா, பரமாத்மாவுடன் ஒன்றிணைவது தான் யோகா. அதாவது மனிதன் கடவுளுடன் ஒன்றிணைவது. நாம் நமக்குள் இணைந்த பிறகு அடுத்த கட்டமாக இறைவனோடு ஐக்கியமாதல் வேண்டும். இது ஓர் உயரிய ஆன்மிக நிலை.

 

 பல்வேறு யோக மார்க்கங்கள் மூலம் மனிதன் இறைவனை அடையலாம். பக்தி யோகா, ஜனன யோகா, கர்மயோகா, குண்டலி யோகா, மந்திர யோகா, ஹதயோகா மற்றும் ராஜ யோகா என்பவை.

 

கி.பி., 300--200ம் ஆண்டுகளில் வாழ்ந்த பதஞ்சலி முனிவர் தான் யோகாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவருக்கும் முன்பே நம் முன்னோர்கள் யோகாசனப் பயிற்சி செய்துள்ளனர்.


மனிதனின் நாகரிக, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்றினை ஆராய்ந்து பார்த்தால் இன்பத்தையும், அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருட்கள் மூலம் இவற்றை பெற நினைத்தான். தொழில்களை வளர்த்தான். ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் மட்டும் கிடைக்கவில்லை. மாறாக துன்பமும், தொல்லைகளும் தொடர்ந்து வந்தன.

 

இந்நிலையில் தான் மெஞ்ஞானத்தை தேடத் தொடங்கினான். யோகிகளும், முனிவர்களும் வனவாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கண்டறிந்த வழிமுறையில் ஒன்று தான் யோகா வாழ்க்கை. முற்றும் துறந்த துறவிகளுக்குத் தான் யோகா ஏற்றது என்றும் மற்றவர்கள் பின்பற்றினால் தீமை ஆகிவிடும் என்னும் தவறான கருத்துக்கள் மக்களிடம் பரவியுள்ளன.

 

மேலும் யோகா என்பது ஆசனங்களை மட்டும் கற்றுக் கொள்வது என்று எண்ணக் கூடாது. ஏனெனில் யோகக் கலையில் அமர்ந்திருக்கும் எட்டுப்படிகளில் ஒன்றுதான் ஆசனம்.

 

யோகக் கலை


யோகக் கலையின் எட்டுக் கட்டங்களானவை.

 

பகிரங்க யோகா

யாமா   - தீயன விலக்கல் - பிரபஞ்ச ஒழுக்கம்

 

நியமா  - ஒழுக்கத்தின் மூலம் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளுதல்,

 

ஆசனா            - உடல் தோற்றம்,

 

பிரணயாமா       - சுவாசத்தை கட்டுப்படுத்துதல்,

 

பிரத்தியாகரா      - புலன்களை அடக்குதல்,

 

 

அந்தரங்க யோகா

 

தாரணா - மனதை ஒருமுகப்படுத்துதல்,

 

தியானா - தியானத்தின் மூலம் மனதை கட்டுப்படுத்துதல்,

 

சமாதி  - துாய தியானத்தினால் உருவாகும் உயர்ந்த நிலை.

 

பதஞ்சலி முனிவர் உரைக்கும் எட்டு படிகளில்

 

பகிரங்க யோகா

எட்டு படிகளில் முதல் ஐந்து படிகளான யாமா, நியமா, ஆசனா, பிரணயாமா, பிரத்தியாகரா ஒருவனின் புற செயல்கள் அல்லது வெளிச்செயல்பாடுகள் பற்றியதாகும். இதனை பகிரங்க யோகா என்கிறோம்.

 

அந்தரங்க யோகா

அடுத்த மூன்று படியான தாரணா, தியானா, சமாதி ஆகியவை ஒருவனின் உள் மனது, எண்ணம் பற்றியவை. ஆதனால் இவை மூன்றும் அந்தரங்க யோகா என்கிறோம். 

பயன்கள்: 

உடல் உள் உறுப்புகளும், வெளி உறுப்புகளும் பயன்பெறும், ரத்த ஓட்டம் சீராகும். நல்ல சிந்தனை, செயல் உண்டாகும். நாள் முழுவதும் சுறு சுறுப்பாக இருக்க முடியும். மூச்சு பயிற்சி மூலம் ஆயுள் நீடிக்கும்.நோய்கள் வராமல் தடுக்கும். வந்த நோய்கள் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியம் பெருகும், உற்சாகம் கூடும். உடல் மண்டலங்கள் அனைத்தும் சீரடையும். இளைமை கூடும்.

 

மன அழுத்தம் நீங்கி மன வலிமை கிட்டும். கோபம், பயம் நீங்கும். ரத்த அழுத்தம், இதய நோய்கள், ஆஸ்துமா, துாக்கமின்மை, முதுகுவலி, வலிப்பு, சக்கரை நோய், மூட்டுவலி, மாதவிடாய் பிரச்னைகள் போன்றவை கட்டுக்குள் இருக்கும்.

 

உங்களில் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். உங்கள் உடலில் நல்ல பேரொளி உண்டாகும். உடல் மாபெரும் வலிமையுடன் திகழும். நன்கு பசிக்கும், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகி உடலில் கலக்கும். களைப்பு, இளைப்பு, காமம் உங்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும்.ஒவ்வொருவரும் தானே பயிலும் போது நமது எண்ணங்களின் சுழற்சிகளின் வலிமையினால் மக்களும் நம் தேசமும் அனைத்தும் வளம். பெறும்.

 

 

 

அசப
(ஓம்; காரம் மானசீகமாக உச்சரிப்போம்)


அசபை என்பது உச்சரிக்கப்படாமலே பிரணவத்தோடு சேர்ந்து இயங்கும் மந்திரம் அசபை. இதுவே பிரணவ மந்திரம் என்றும் கூறப்பெறும். மூச்சுக்காற்று “ஹ” என்ற ஒலியுடன் வெளிப்படுகிறது. “ஸ” என்ற ஒலியுடன் உள்நுளைகிறது.

பிரணவம் என்பதும் இதுவேயாகும். மந்திரம் என்பதும் இதுவேயாகும்.
இது “ஓம்” என்னும் ஓரெழுத்துச் சொல்லாகும்.
மனத்திலேயே உணரத் தகுந்தது பிரணவம்.
அனைத்து மந்திரங்களுக்கும் ஆதாரமாக நிற்பதும் இதுவே.

இம்மந்திரத்தை எல்லா உயிர்களும் செபிக்கிறன. நாம் சுவாசிக்கும் காற்றே உயிராகும். அமைதியாக எவ்வளவு காலம் நேரம் சுவாசிக்கிறோம் என்பதற்கு அமைய ஒருவர் நீண்டகாலம் வாழலாம். சராசரியாக ஒருவர் 100 ஆண்டுகளுக்கு மேல் சீவிப்பதைக் காண்கிறோம்.

ஒருவர் அமைதியிழந்த வாழ்க்கைக்கு உட்படின் அவர் தீவிரமாகச் சுவாசிப்பதாக அமைவதைக் காண்கிறோம். எனவே நாம் அமைதியடையக் கூடிய இப் பிரணவ மந்திரத்தை உற்ற வழிகாட்டலுடன் ஓதக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஓரேழுத்து பிரவம் ஒங்காரம் இது அ. உ. ம் என்ற மூன்று எழுத்துக்களை உடையது பிரணவத்தை எண்ணுவதே தவிர ஜெபிப்பதில்லை ஆகதலின் “அ ச பை” என்பவர் சுவாமி ரமண மகரிசின் கூற்றுப்படி
(ஆ) ஒன்று நாம் வாய்விட்டு இசைப்பதாகும்
(ஆ) இரண்டாவது சப்தம் வெளிவராமல் கொண்டை அசைத்து உச்சாடனம் செய்வதாக அமையும் இந்நிலையில் உடல் உறுப்புக்கள் யாவும் இசைவுபட உச்சாடனமாக அமைவதை உணரலாம்
(இ) மூன்றாவதாகக் குறிப்பிடுவது மனத்தால் மானசீகமாக உச்சாடனம் செய்வதாகும் இந்நிலையை அசபை எனக் குறிப்பிடுவர் புகழ்ந்து சொல்லப்படுகிற ஞானத்தை (ஓம்) உலகநாயகனாகிய சிவன் திருவடியைத் துணையெனத் தெளிகிறேன்.

“சேவடியடையும் சிவயோக நெறியை உங்களுக்குச் சொல்கிறேன்.
எனத் திருமூலர் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்

“ போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
காற்றுகின்றேன் அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின்றேன் நம்பிரான் ஓர் எழுத்தே திருமந்திரம் 884

பிரணவமே ஞானமாகவும் ஞானத்தை அடையும் நெறியாகவும் உள்ளது எனக் குறிப்பிடுவர்
சுவாசம் தொடர்பாகச் சில அடிப்படை உண்மைகள்
 உடம்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் அனைத்தும் காற்றில் இருக்கின்றன. காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு நெடுங்காலம் உயிர் வாழ்ந்த சித்தர்கள் யோகிகள் இருந்துள்ளனர். அது அவர்கள் கற்ற வாழும் கலை
 சுவாசம் நின்றுவிட்டால் உயிர் நீங்கிவிடும் உடம்பு இறந்து விடும் காற்று இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது.
 கல்வியோ கற்கும் திறனோ இல்லாத நல்ல பாம்பு இரை என எதுவும் தின்னாமல் காற்றை மட்டுமே உணவாக உட்கொண்டு ஆறு மாதத்திற்கு மேலாக உயிரோடு இருக்கும்.
 ஆனால் மனிதர்கள் காற்றின் சிறப்பையும் காற்று எந்த அளவுக்கு உடம்புக்கு இன்றியமையாதது என்பதையும் அறிந்து கொள்ளாமல் வறுமையினால் பசிக்கொடுமையினால் இறந்து விடுகிறார்கள்.
 காற்றைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறினால் நுரையீரல் நோய்ää மார்பு நோய் இருமல் உணவு செரியாமை முதலான அசௌகரியம் நோய்கள் சம்பவிக்கின்றன. தூய்மையான காற்றை முறையாகப்; பயன்படுத்தி வந்தால் உடம்பு நீண்ட காலம் வாழும்.
 வாழ்க்கை என்பது கலை. வாழும் கலையைக் கற்றுவர் நீண்ட காலம் வாழ்கின்றனர். வாழ்க்கையில் பெறப்படுகின்ற இன்பத்தின் அளவேää வாழ்க்கையில் கிடைக்கப் பெறுகின்ற வெற்றியின் அளவாகும்.

“கடவுளை அறிந்து கொள்வதற்கான ஒரு வழி
அவர் படைத்திருப்பனவற்றைக் ஊன்றிக் கவனிப்பதாகும்”.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                                               

முதுமையின் நடத்தைக் கோலம

முதியவர்களும் வாழ்க்கை முறைமைகளும்

முதியோர்கள் தாம் பின்பற்றி வளர்ந்த பழக்க வழக்கங்களை ஒட்டியே முதுமையில் அவர்தம் வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக் கொள்கின்றனர். இருப்பினும் அனைவருக்கும் பொதுவாக உள்ள சிறப்பு அம்சங்கள் மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில் முதியோர்களின் வாழ்க்கை முறைகள் அனைத்தும் பின்வருமாறு அமைவதை அவதானிக்கலாம்.

ஒயாத உழைப்பு.
தம் வாழ்க்கை முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்களின் பிள்ளைகளும் தமது தந்தையின் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் இறுதி மூச்சுவரை உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தமது பிள்ளைகளுக்குத் தம் பணம் தேவையில்லை என்றால் தமது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து மகிழ்கின்றனர். அல்லது வீடு முதலிய அசையால் பொருட்களில் சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர்.


பகுதிநேர வேலை.
சில குடும்பங்களில் தமது பிள்ளைகள் வெளி நாடுகளுக்குச் சென்று விடுவதால் முதுமையில் கணவன்ää மனைவி இருவர் மட்டுமே தனித்து வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

தமது செலவுக்குத் தேவையான அளவு மட்டுமே வேலை செய்து சம்பாதிக்கின்றனர். இதனால் அவர்தம் வாழ்கை சுறுசுறுப்பாக அமைவதோடு தமது நேரத்தையும் பிரயோனமாகச் செலவிடுவதனால் ஆரோக்கியமாக அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
ஓய்வு பெற்ற பின் பிரயோசமான வாழ்க்கை.
அரச வேலை தனியார் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின் வேறு வேலை தேடிக்கொள்கின்றனர். சிலர் முழு நேரப்பணியிலும் சிலர் பகுதி நேரப்பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். சிலர் தமக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்க்கை நடாத்துகின்றனர். இவர்கள் வீட்டுவேலைகளில் உதவியாக இருந்து தமது நேரத்தைச் செலவிடுகின்றனர். கடை சந்தைக்குச் சென்று தமக்குத் தேவையானவைகளை வாங்கி வருதல் பேரக் குழந்தைகளைப் பாரமரிப்பது அவர்களுக்குக் கல்விய10ட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். தமது நேரத்தை அவமே கழிக்காது பிரயோசமாகச் செலவிடுவதைக் காணலாம்.

குறிக்கோளற்ற வாழ்க்கை.
சிலர் எதுவே செய்யாமல் நேரத்தை அவமே கழிக்கின்றனர். இவர்களுக்கு வருவாயும் இல்லை. தமது வீட்டு வேலைகளையும் மனமுவர்ந்து செய்ய மாட்டார்கள். யாருக்குக்கும் எவ்விதமான உதவிகளையும் அளிக்க மாட்டார்கள். ஆன்மிக ரீதியான முயற்சிகளிலும் பெரிதும் ஈடுபாடில்லை. அனைத்திற்கும் தமது பிள்ளைகளையே சார்ந்திருப்பதைக் காணலாம். உடல் உழைப்பில்லா வாழ்க்கை இதனால் உடல் உறுதி பெறவும் மாட்டாது. நோய்களாகிய நீரிழிவுää பக்கவாதம்ää இருதய வியாதிää முட்டுளைவு முதலான நோய்களை மிக எளிதில் வலிந்து பெற்றுக்கொள்ளவதாக அமைவதை அவதானிக்கலாம்.

சமூக சேவையில் ஈடுபாடு.
வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின் வருமானம் தேடி எவ்வேலையையும் ஏற்பதில்லை. தமக்குக் கிடைக்கும் ஓய்வ10தியம் மற்றும் தம்மிடம் இருக்கும் வசதி வளங்களைப் பிரயோசனப்படுத்தி தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தமது நேரத்தைப் பிரயோசனமான முறையில் சமூகசேவையில் முழுமையாக அர்ப்பணம் செய்கின்றார்கள்.

எவ்வித வருவாயையும் எதிர்பார்க்காமல் தமது வாழ்வியல் அனுபவத்தைக் கொண்டு இப்பணியை இறைசேவையாக ஆற்றாவருவதும் கண்கூடு. இதனால் இவர்கள் ஆன்மீகப் பாதையில் வெகுவாக வளர்ச்சி அடைகின்றனர். அவர்கள் சமூகத்தில் மேன்மையடைதலைக் காண்கிறோம். சுறுசுறுப்பாக அவர்தம் வாழ்க்கை அமைவதனூடாக ஆரோக்கிய நிலையில் உயர்வாக இருப்பதையும் அவதானிக்காலம்

ஆன்மீக வாழ்க்கை.
சிலர் பணம் சம்பாதிப்பதும் இல்லை. தமது சேமிப்பில் இருந்து செலவு செய்வதுமில்லை. இறை அருளை மட்டுமே நம்பி ஆன்மிக சாதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவையாகப் பணியாற்றுபவர்களும் உண்டு.

 

முதியோர்களுக்கு அனுகூலமற்ற
சுற்றுச் சூழல்கள்


அடுக்கு மாடிக்கட்டிடங்கள்.
சாதாரணமான நேரங்களில் (டுகைவ) லிப்ற் மூலம் உயர் கட்டிடங்களில் ஏறு இறங்குவர். மின்சாரம் துண்டிக்கப்படும் வேளைகளில் பெரிய சிரமத்திற்கு இலக்காவர் இம்மாடி வீடுகளில் இருப்பவர்கள் தமது உடலை உறுதி செய்யும் வகையில் இருமாடிகளைத் தினம் ஏறி இறங்கிக் கடப்பதன் மூலம் தமது உடல் ஆரோக்கியத்தை உயர் நிலையில் பேணியவர் ஆவர்.

கட்டிடங்கள் அறைகளின் அமைப்பு.
இப்புதிய கட்டிடங்கள் நிலம்ää படிகளுக்கு எல்லாம் மாபிள் கருங்கற்கள் பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். இக்கற்களின் கூர்மையான வடிவமைப்பும் வழுக்கி விழும் தன்மையும் மூலைகள் கூர்மையாக இருப்பதும்ää முதியவர்களுக்கு ஒரு சவாலாகவே(தொல்லை) அமைவதைக் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில் சமநிலை தடுமாறி விழும் வாய்ப்புகள் அதிகமாகின்றன. இதனால் காயங்கள் எலும்பு உடைதல் உயிராபத்தும் ஏற்பட வாய்ப்பாகின்றது.

படுக்கும் மெத்தைகள்.
இன்றைய வாழ்வியல் முறையில் (குழயஅ) போம் மெத்தைகளின் பாவனை பழக்கமாகிவிட்டது. இவை எமது உடல் நலத்திற்கு முக்கியமாக மூத்தவர்களைப் பொறுத்தவரை மிகவும் கெடுதலாக அமைகின்றது என்பதை எம்மில் அனேகர் உணர்வதில்லை. முள்ளந்தண்டு உறுதியடைய இருத்தல் மிக அவசியம் அல்லாவிடின் கழுத்துää இடுப்புää நாரி உளைவை மேம்பட வாய்ப்பாகலாம். எமது கட்டில்ää மெத்தைக்கு மேல் உறுதியான பலகையின் மேல் துணி விரித்து அதன் மேல் உறங்குவது எமது உடலை உறுதி செய்வதாக அமையும்.


பேரூந்துகளில் பிரயாணம்.
முதுமையான வயதினில் இப்பேரூந்துகளில் பிரயாணம் கடினமாகின்றது. பஸ்களின் படிகள் மிக உயரத்தில் இருப்பதனால் அதில் ஏறுவது மிகவும் சிரமமான காரியமாகின்றது. சன நெரிசலான வேளைகளில் நின்று பிரயாணம் செய்வது இம்மூத்தவர்களுக்கும் மிகவும் கஷ்டமாக அமைகின்றது. மிகவும் விரைவாக இவ் வாகனங்களை எடுக்க முற்படும்போது மூத்தோர் ஏறி இறங்குவதற்கு நேரம் போதாமையினால் மிகவும் கஷ்டப்படுவதை அவதானிக்கலாம்.

நடப்பதில் மிகவும் சிரமம்.
உடலை உறுதி செய்யும் வகையில் நடத்தல் மிகவும் சிறந்த அப்பியாசமாகும் தினம் 40-50 நிமிடம் காலையில் நடப்பதின் மூலம் நாம் முதுமையடைந்தாலும் சுறுசுறுப்பாக வாழ்க்கையை அமைத்தல் கைகூடும். அதே வேளை கூடிய நேரம் ஓரே இடத்தில் இருப்போமாகில் உடல் நலம் குன்றுதலைத் தவிர்க்க முடியாது. அத்துடன் கூடிய எடை கொண்டவராகில் கால்மூட்டு உழைவு மேலோங்குவதாக அமைவதைத் தவிர்க்க முடியாது. மக்கள் அவசரமாகச் செல்லும் போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பொருட் படுத்துவதில்லை. இதனால் மூத்தோர் நடக்கும் போது ஒரு பய உணர்வுடனே நடக்க வேண்டியுள்ளது. நடத்தல் குறைவடையின் உள நெருக்கீடும் உடல் உபாதை மேலெழுவதையும் தவிர்க்க முடியாது.

முதுமையில் வீட்டில் எழும் பிரச்சனைகள்.
பல மூத்தோர் தமது வீட்டில் உள்ளோரை அண்டியே வாழவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். சிலர் எழுந்து நடக்க முடியாமலும் எழுந்து இருக்க முடியாமலும் அவதிப்படுகிறார்கள். சிலர் இருதய வியாதி பாரிசவாதம் அல்லது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்கும் “அல்மெர்” முதலான நோயினால் துன்புறுவார்கள்.


இத்தகைய மூத்தோர்களின் நிலை மிகவும் கஸ்டமானதாக அமைய முடியும். இத்ததையவர்களின் பராமரிப்பு கையாள்வது கடினமானதாக அமையும். இவர்களைப் பொருத்தமான மருத்துவத்துறை விடுகளில் பராமரிப்பது அவசியம்.

சரியாக அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் ப10ர்த்தி செய்யாது விடில் கடின வேலைகளைச் செய்யுமாறு வலியுறுத்தல்ää அவர்களைக் கீழே தள்ளிவிடல்ää எழுந்து இருக்க முடியவில்லைää நிற்க நடக்க முடியவில்லைää அவ்வேளையில் உதவி செய்ய மறுத்தல்ää அடித்து துன்புறுத்தல் முதலானவை மூத்தோரை உடல் உள ரீதியாகக் கொடுமைப் படுத்தலாக அமையும். தகாத வார்த்தைகளால் தூசித்தல்ää கேலி செய்தல் முதலானவை அவர்களை மனத்தளவில் கொடுமைப் படுத்தலாகவே அமையும். அதேபோல கணவர்களும் தமது வாழ்க்கைத் துணையில் கஷ்ட துன்பத்தை சீராக உணர்வதில்லை.

மேலும் இளைஞர்களோ வயோதிபத்தின் இயலாமையைப் புரிந்து கொள்வதில்லை. தம்மை போலவே அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியும் எனும் எண்ணத்தில் கடினமான வேலைகளை மூத்தோரில் தலையில் சுமத்துகிறார்கள்.

 

 

 

முதுமையில் தனிமை.
அரச, அரசு சார்பற்ற தனியார் நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற பின் எமது பொது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவரை பழகி வந்த சகநண்பர்களுடன் முன்புபோல பழக முடிவதில்லை. மேலும் பலவித தொழில் அந்தஸ்தில் இருந்தவர்கள் அவ்விழப்பை தாங்குவதில் மனத்தளர்ச்சி அடைவதும் உண்டு.

ஓய்வு பெறமுன் நாம் ஒவ்வொரும் மனத்தளவில் தாங்கும் சக்தியை வளர்க்க வேண்டும். பலவிதமான முயற்சிகளில் ஈடுபடலாம். இயலாதவர்களுக்கு எம்மாலான இயன்ற உதவிகளைச் செய்வதன் மூலம் நாம் மன நிறைவு அடையலாம். எண்ணமே வாழ்வு என்பர். இதற்குரியதாக எம்மைத் தயார்ப்படுத்துவோம்.


தனிமைக்கு முகம் கொடுப்பதற்கான ஆலோசனைகள் சில.


(அ). தனிமையடைதலைத் தவிர்க்க.
எம்மைப் போல ஓய்வு பெற்றவர்களுடன் நாம் தொடர்பை ஏற்படுத்தலாம். புதிய நண்பர்கள் உழைப்பாளிகள் முதலானவர்களுடன் அன்யோயமாக பழகுதல் அவர்களின் தேவை அறிந்து இயன்ற உதவி சேவைகளை ஆற்றுதல் இதன் மூலம் அவர்களும் ஈடுபாடாக பழக முன் வருவர்.

ஆனால் ஒரு சிலர் நிர்வகிகள் முகாமையாளர்ää அதிபர்கள்ää அதிகாரிகள் நீண்டகாலம் ஒரு இடத்தில் இருந்து முகாமை செய்தல் கட்டளைகளை நிறைவேற்றியமையால் அவர்களால் ஒரு படி கீழ் இறங்கிக் வருவதற்கு மனத்தளவில் இறுக்கமாக இருக்கிறார்கள். இதனால் ஏனையவர்களுடன் அன்பாக பழக முன்வருவதில்லை. இந்நிலை நிச்சமாக மாற வேண்டும். அல்லாவிடின் தனிமையடைதலைத் தவிர்க்க முடியது.

(ஆ). அன்யோன்ய உறவ
நாம் தனித்து வாழமுடியாது நிச்சயமாக அயலார்ää நண்பர்கள் இனத்தாருடன் அன்யோன்ய உறவை வளர்க்க வேண்டும். சுகதுக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். இன் முகம் காட்டி உரையாட வேண்டும். மற்றவர்கள் பொறுமை பேணி ஈடுபாட்டுடன் செவி மடுக்க வேண்டும். நாம் ஈடுபாட்டுடன் செவிமடுப் போமாகில் நிச்சமாக அவர்களும் எம்முடன் விரும்பி உறவாடமுன் வருவர். மற்றவர்களுக்கு உதவி வாழ்வோம். நிச்சமாக எமக்குத் தேவைகள் ஏற்படும் போது நாம் கேட்காமலே அவர்கள் எமக்கு உதவ முன்வருவர்.

(இ). இழப்பின் ஆழத்தை உணரல்
குடும்பத்தில் கணவன் மனைவியாக நீண்டகாலம் இணை பிரியாது வாழ்வர்கள் இச்சூழலில் கணவன் அல்லது மனைவியை இழக்கும் நிலை இயல்பேயாகும். இந்நிலையைக் கூடிய விரைவில் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். இழந்த ஒருவருக்குத்தான் அவ்விழப்பின் ஆழத்தை உணர முடியும். அவ்விதம் மீழ்வதன் மூலமே தனிமையின் கொடுமையில் இருந்து மீளல் சாத்தியமாகும்.

இழப்பை மறக்க முடியாது ஆனால் அச்சுழலுக்கு ஏற்ப எம்மைத்தயார்ப்படுத்த மிக அவசியமாகும். மூப்பான வயதில் துணையின் தேவையை உணர்ந்தாலும் மறுவிவாகம் சமூகத்திலும் குடும்பத்திலும் பலவித துன்பியலைக் கொடுப்பதாகவே அமையும். இன்றியமையாத உதவிகளுக்கும் துணைக்கும் நண்பர் வட்டத்தை சீராக வளர்த்தல் வேண்டும்.

(ஈ). நேரம் பொன்னானது.
ஒருவருடன் பழகும் போது அவர்களுடைய நேரத்தை அதிக நேரம் பேசி வீணடிக்கமால் இருப்பதை எப்போதும் எமது மனத்தில் வைத்திருப்போம். எப்பொழுது மற்றவர் தேவைகள் கலன்களைப் பற்றியும் எமது கருத்துக்கு எடுக்க வேண்டும். எம்மில் பலர் எங்கு சென்றாலும் எமது பிரச்சனைகள் நெருக்கீடுகள்ää மனத்தாக்கங்கள் பற்றியே உரையாடுவதுண்டு. இம்மாதிரி எமது கருத்துக்களை முன் வைக்குமுன் அவர்களின் சூழ்நிலை தொடர்பாகச் சிந்தித்தே உரையாட வேண்டும். அதன் முதற்படி எமக்கிடையில் அன்யோன்யமான மனநிலை அவர்கள் உணர்வுகளை மதித்தல் இதற்கிடையில் அவர்கள் கூறுவதை செவி மடுக்கும் பண்பு (யுஉவiஎந டளைவiபெ) முதலியன அவசியமாகும். சுமூக நிலை ஏற்படும் போது கருத்துக்களை முன்வைப்பதே உகந்தாகும். கலந்துரையாடும் வேளைகளில் விடுத்துக் கேள்வி கேட்பதைத் தவிர்த்துக் கொள்ளவோம்.

எமது ஓய்வு நேரத்தை சூழலுக்கு ஏற்ப பிரயோசனப்படுத்தலாம்.
 பெரியோர்ää வாழ்க்கை வரலாறுää அவர்களின் கூற்றுக்களை வாசித்தல்ää அறிதல்.
நீதி நூல்கள்ää ஆன்மிக நூல்களைப் படித்தல்.
 எமக்குப் பரீட்சயமான முயற்சிகளில் ஈடுபடல்
உம்- கற்பித்தல். செய்து காண்பித்தல் (ப10மரங்கள் ஓட்டுதல்)
 கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளல்.
 சற்சங்கம் கலந்துரையாடல்ää மூத்தோர் கழகம் சங்களில் இணைந்த சேவைகள்.
 மூத்தோர் நோயாளர்களை சந்தித்தல் -
இயன்ற சேவைகள் அளித்தல் தனிமையில் இருப்பவர்களும் - ஈடுபாட்டுடன் உரையாடல்
சில உணவுகள்ää பழங்கள் எடுத்துச் சென்று கொடுத்தல்.
 யோகா உடற்பயிற்சிää தியானப் பயிற்சி அளித்தல்.
 இம்மூத்தோர் சேவை நாடி வருபவர்களுக்கு அளித்தல்
எம்மிடம் நிறையப் பொருள்ää பண்டம்ää வசதிகள் இருக்கின்றன.
வளமாக இருக்கும் போது இயன்ற இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.


குறிப்பு
நாம் செய்யும் தானதருமங்கள் சேவை பிரதி உபகாசம் கருதாது இதன் பலன் தான் எமக்கு எமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுமே தவிர வேறு எதுவும் எம்முடன் வரமாட்டாது. சட்டை ஊசி கூட எடுத்துச் செல்லமாட்டோம். எனவே பகுத்துண்டு பல உயிர் செம்புதல் எத்துனை சிறப்பு என்பதை எமது கவனத்தில் கொள்வோம்.

 

     
             

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 Web Master: K.Kamalasekaram-கமலம்

 Email: kamalamnet@gmail.com - kamalam

 0094 77 6636596, 0094 212213150