திரு.கா.வைதீஸ்வரன்

சுகவாழ்க்கை“ பத்திரிகை ஆசிரியர்

உடல், உள, சமூக, ஆன்மீக மேம்பாடு வழிகாட்டுனர்

சுகநலக் கல்வியாளர், உளவள ஆலோசகர், சமூக சேவையாளார்

 
        1

  Home Geriatrics     Sukavaalkkai.1 Sukavaalkkai.2 Sukavaalkkai.3 Sukavaalkkai.4 Articles EX.BANKERS NORTHERN.BANKERS
  முகப்பு   முதியோர்      சுகவாழ்க்கை.1 சுகவாழ்க்கை.2 சுகவாழ்க்கை.3   சுகவாழ்க்கை.4   கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
 

மகிழ்வான ஆரோக்கிய வாழ்வுடன் விடைபெறுவோம்!.   

Enjoy A Healthy Aging & Depart Happily!.

 

முதுமையின் நடத்தைக் கோலம்

கலாபூசணம்கா.வைதீஸ்வரன்.
“சுகவாழ்க்கை“ மலர் ஆசிரியர்
சுகநலக்கல்வியாளர் உடல்,உள, சமூக
ஆன்மீக மேம்பாடு வழிகாட்டுனர்
(077 3179715, 011 2717401)

முதுமையில் எழுகின்ற உடல் உளம் சார்ந்த பிரச்சனைகளை உடல்நல, உளவள பயிற்சிகள் மூலம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரலாம்.

மனித வள ஆற்றுப் படுத்தல் வழிகாட்டல்

(Counselling & Guidence)

மூத்தோருக்கான சுகநல விடயங்கள் வழிகாட்டல்கள்لل அப்பியாசங்கள்لل கருத்துரையாடல்,கலந்துரையாடல், சற்சங்கம்

மூத்தோருக்கு தொல்லை தரும்
தொற்றா நோய்களும், தொற்றும் நோய்களும், சிக்கல்களும் தவிர்க்கும் முறைகளும், குறைக்கும் வழிகளும்


Basic Skills in active Listining

Time Management

குடும்ப உறவும் பேணலும்

முதியோர் குடும்பத் தலைவர், தலைவிகளின் சிறுவர் சிறுமியரின் நடத்தைக் கோலங்களும் சாதக பாதகங்களும் இன்னோரன்ன விடயங்களின் பற்றிய வழிகாட்டல்கள் கருத்துரைகள் பயிற்சிகள் மூலம் நிவர்த்தி செய்யலாம் பயனடையலாம், சுகவாழ்வு வாழலாம்

தொகுப்பு க.கமலசேகரம்
இணைச் செயலாளர்
இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம்

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உணவுப் பழக்க வழக்க முறையும்

எமது வாழ்க்கையும்


உணவு தொடர்பான பழக்க வழக்கம் அளவாக உண்ண தெரிந்திருப்போம். மூத்தோராகிய நமக்கு அரைவயிறு நிரம்பினாலே போதும் ஆறுதலாகச் சப்பிச் சாப்பிடுவோம் (15.நிமிடமாவது செலவிடவும்). நாவுக்கு அடிமையாகாது இருப்போம். தின உணவில் இலைவகைلل காய்கறிவகை அடங்குவதை நிச்சயப்படுத்துவோம். உறைப்பு, இனிப்பு, கொழுப்பு, உப்பு, தற்போதைய பாவனையில் அரைவாசியாக்குவோம் தன்னடக்;கமாக இருப்போம். இரவுநேரம்; நீராகாரம் தவறாமல் எடுப்போம். அளவாக எமக்குரிய உணவை மாத்திரம் எடுத்து உண்போம். அளவாக எமக்குரிய உணவை மாத்திரம உண்போம். விரயம் தவிர்ப்போம். உண்ணும் போது ஒருபிடி உணவை யாருக்கும் கொடுத்து உண்போம்.

இவற்றை மானசீகமாகக் கடைப்பிடித்தல் மலச்சிக்கல் ஏனைய உணவு தொடர்பான பிரச்சினைகள் எழமாட்டா. பிரச்சினைகளை எண்ணாது மன நிறைவாக எமது வாழ்க்கையை அமைக்கலாம்

உடல் உழைப்புனான வாழ்க்கையை அமைப்போம்
“உடலை உறுதி செய்” பாரதிபாடல். எறும்பு ஈ முதலானவைகளின் சுறுசுறுப்பான வாழ்க்கை முன் உதாரணமாகும். தற்போதைய நாகரிக வசதிகள் குழந்தைகள் முதல் மூத்தோர்வரை உடலை அசைக்காத வாழ்க்கைلل அதன் ஆபத்தை அறியாத அவலம், எமது குழந்தைகளை எதுவித அன்றாட வாழ்க்கையுடன் இணைக்காத வாழ்க்கை முறையுடன் வாழ்ந்து வருகின்றனர்;. மூத்தோர் நடத்தையை உணர்ந்து முன் உதாரணமாக கடைப்பிடித்து ஒழுகி வாழுதல் அவசியமாகும்.

உடல் உழைப்பில்லா வாழ்க்கை முறையினால் தொற்றா நோயின் அதிதீவிர ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. எமது பாடசாலை மாணவர் நீரிழிவுநோக்கு
12–15 வயதினில் யாழ்ப்பாணம் பிரத வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்கள். முப்பது வயதினிலே வாழ்க்கையின் கடைசிக் காலத்;தை அடையும் பரிதாபம் எழுந்துள்ளது. இப்பேராபத்தை உணர்ந்து எமது குழந்தைகளைச் சரியாக வழிகாட்டுவதோடு நாமும் எமது வாழ்கையைச் சுறுப்பாக மாற்றி அமைப்போம்.

எம் முன்னோர் எப்படியாகத் தமது தின வாழ்க்கையை அமைத்திருந்தார்கள்?. கிட்டிய தூரத்தை நடந்தே கடந்தார்கள் தமது தொழில் மேலும் அன்றாட வாழ்க்கை மூலமே தமது கடமைகளை நிறைவேற்றினார்கள். அதன் மூலம் அவர்கள் உடல் உபாதைகளின்றி நிறை வாழ்க்கை வாழ்ந்து துன்பியல் இன்றி இறுதி மூச்சை விட்டார்கள்.

தற்போதைய நிலையில் நாம் யாது செய்யலாம்?. நாம் ஆழமாகச் சுவாசிக்கும் பயிற்சிகளில் ஈடுபடுதல் மிகவும் அவசியமாகும். எமது மூச்சுத்தான் எமது உயிராகும். பிறந்தவுடன் முதல் மூச்சு அமைகிறது. கடைசி மூச்சு இறுதி மூச்சாக அமைய முடியும். தொடர்ந்து சுவாசம் நடந்து கொண்டே இருக்கிறது. எமது சுவாசத்தில் அக்கறை கொள்கின்றோமா இல்லவேயில்லை. மூச்சு எடுத்து விடமுடியாது கஸ்டப்படும் போதுதான் சுவாசத்தின் அருமையை உணர முடியும்.

தினசரி மூச்சைவிடும் போது உடலில் வெளியேறிய கரியமில வாயு வெளியேற்றப்படுகிறது. இயல்பாக அவ்விடயத்தை பிராண வாயுவும் பிராண சக்தியும் நிரப்புவதாக அமைய முடியும். ஆனால் நாம் உடல் உழைப்பில்லாது எமது அன்றாட வாழ்கை அமைவதனால் கரியமில வாயு முழுமையாக வெளியேற்றப்படா நிலைமை மேலெழுகின்றது. நாம் ஆழமாகச் சுவாசிக்க கற்றுக்கொள்மாகில் போதியளவு பிரணவாயு பிராண சக்தியை உள்ளெடுப்பவர் ஆவோம். இவை உச்சியில் இருந்து உள்ளங்கால் வரையான சகல கலங்களையும் நிரப்பிப் போசிப்பதாக அமையும்.

உடல் அங்கங்கள் யாவும் உறுதி பெறுவதனால் நாம் ஆரோக்கியமாக வாழ்தல் இலகுவாக்கப்படுகின்றது. இதன் மூலம் எமது உடல் மாத்திரமல்ல உள்ளமும் நிறைவு அடைவதை எம்மால் உணர முடியும். மூத்தோரைப் பொறுத்தவரை நடத்தல் மிகவும் உயர்வான அப்பியாசமாக அமைய முடியும். மேலும் துவிச்சக்கர வண்டி மிதித்தல்لل நீந்துதல் முதலான வைகளும் மேற்கொள்ளலாம்.


யோகாசனம், பிராணாயாமம், நாம உச்சாடனம், தியானம் முதலானது எமக்கு உடல் உறுதி அடைய உதவுவதோடு மன அமைதியும் தரவல்ல வைகளாகும், மாணவர் தேக அப்பியாசம் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம்
;(Volley Ball), கிறிக்கற், கயிறடித்தல், தாச்சி மறித்தல் முதலான வைகளில் ஈடுபடுதல் மிக அவசியமாகும். இதன் மூலம் எமது உடலை உறுதி செய்பவர்களாவோம். மேலதிகமான உடலில் கொழுப்பு உடலில் படிவதை தடுத்தவர்களாவோம்.

உடற்பருமன் ஏற்படமாட்டாது. நாம் நடப்பதனால் மூத்தோர் அடங்கலாக ஏற்படும் நன்மைகளாவன


1. கிரமமாக நடப்பதுனூடாக எமது எடையைப் சரிவரப் பேணுதல் கைகூடும்
2. படிமங்களாகத் தேங்கிய கொழுப்புப் படிப்படியாகக் குறைவடையும்.
3. எலும்புகள் உறுதி பெறுவதாக அமையும்.
4. குழுக்கோஸ் மட்டம் சீராகப் பேணப்;படும்,
5. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
6. இரத்த அமுக்கம் வெகுவாகக் குறைவடையும்.
7. இருதயம் உயர் நிலையில் உறுதி பெறுவதாக அமையும்.
8. பொறுமை பேணுதல் உயர்வடையும்.
9. இரவு நித்திரை சீராக இருக்கும், அமையும்.
10. குடும்ப உறவு மேன்மையடையும்.
11. தனிநபர் ஆரோக்கிய நிலை செழுமையடையும்.

அப்பியாசம் செய்வதன் மூலம் கல்சியம் உயர்நிலையில் பேணுதல் சாத்தியமாகும். வீட்டு அன்றாட வேலைகளை நிறைவேற்றல் சுறுசுறுப்பான நடை முதலானவைகள் எமது ஆரோக்கிய நிலையை உயர்வாகப் பேண உதவும்.

 

விழுதல

மூத்தோர் வழுக்கி விழுதலைத் தவிர்ப்போம்
தொடை எலும்பு அல்லது உடலின் பிரதான எலும்புகள் உடையும் நிலை ஏற்படுமாகில் இயல்பாக உலாவி வருதல் தடைப்படலாம் இதனால் இயலாமை காரணமாக நிறுவனங்களினால் பாரமரிக்கப்படும் நிலைக்கு ஏதுவாகலாம் இதற்கான காரணிகளாவன
• வீட்டில் அல்லது வீதியில் விழுவதைத் தவிர்க்க முடியாத
விபத்தெனக் கருதுவோரும் எம்மத்தியில் உண்டு.

• தலைச் சுற்று, பிரமை, உடற்தளர்ச்சி, இருதயத்தில் ஏற்படும் நோய் மயக்கம்
காரணமாக ஒருவர் விழுவதற்கு ஏதுவாகலாம்.
வைத்திய ஆலோசனை நாடுதல் முதற்படியாக அமைய வேண்டும்.

மூப்பான நிலையில் விழுதல் - பலகாரணங்கள் உண்டு
• பாரிசவாதம், பக்கவாதம், பாகின்சன் நோய நடுக்கம் கண்பார்வை குறைவடைதல்,சுயமாகச் சிந்திக்க முடியாமை, முழங்கால் இடுப்பு எழும்புகளில் ஏற்படும் பிடிப்புக்கள் முதலானவைகள்.
• இரத்தோட்டம் தொடர்பான பாதிப்புக்கள், மூளைக்குல் போதியளவு இரத்தம் போய்ச் சேராமை முதலானவைகள்.
• முதுமையில் கால்கள் பலவீனம் அடைதல் கண்பார்வை மங்குதல்.
• போதைப் பொருள் பாவனை உளச்சோர்வு நெருக்கீட்டுக்கான மருந்துகளின் பாவனை முதலியன.
• அசையும் படிகளில் இறங்கும் சந்தர்ப்பங்கள்.
• பஸ் புகையிரதம் முதலியனவற்றில் பயணம்.
• நடைபாதை நிலவிரிப்புக்கள், குளியல் அறை நடைபாதையில் அமைந்துள்ள மாபிள் படிகள் முதலியனவற்றில் வழுக்கல்.

போன்ற பல காரணிகளின் தொகுப்பாகவே மூத்தோர் விழுவதுண்டு.
இவை தொடர்பான விழிப்புணர்வு குடும்ப அங்கத்தவர் யாவருக்கும் அமைய வேண்டும்.

விழுதல் ஆபத்தாக அமைய முடியுமா?.
சிறிய கேள்விப் பரீட்சை
• நான் விழுவதற்கான காரணத்தைக் கூற முடியவில்லை.
• கிழமையில் ஒரு நாள் மாத்திரம் வெளியில் செல்வதுண்டு.
• நான் இருக்கும் கதிரையில் இருந்து எழுதல், உடலைக் கழுவுதல், உடை அணிதல், முதலானவைகளுக்கு எனக்கு உதவி தேவை.
• நான் சமநிலையாக நிற்கக் கஷ்டப்படுகிறேன்.
• நடக்கும் போது தடுமாற்றம், தள்ளாட்டம் ஏற்படுகிறது.
• எனது கால் அல்லது இருகால்கள் பலம் இழந்ததை உணர்தல் அல்லது உணர்ச்சி குறைவடைதல் கால்கள் அசைக்கும் தன்மை குறைவடைதல் முதலியன.
• எனக்கு முன் உள்ள பொருளைப் பார்ப்பது கஷ்டம், நிலத்தில் உள்ளதைப் பார்ப்பதில் கஷ்டம்.
• நித்திரைக் குளிசைகள் அல்லது போதை வஸ்துக்கள் அல்லது மன உளைச்சலுக்கான மருந்து பாவிக்கிறேன்.
• மதுப்பாவனையில் சிக்கியுமுள்ளேன்.
• கால் துடைப்பங்கள் போதிய வெளிச்சமின்மை வழியில் ஏதாவது பொருட்கள் தடை செய்வதாகலாம்
நான் விழுந்து விடுவேனா எனப் பயமாக இருக்கிறது.
விடையும் குறிப்பும்
• முதலாவது கேள்விக்கு
“ஆம்” எனில் நிச்சமாக மேலும் விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறீர்கள்
• ஏதாவது இன்னும் ஒரு கேள்விக்கு
“ஆம்” என மறுமொழி அளிப்பீர்களாகில் மேலும் விழும் ஆபத்தான நிலையில் இருக்கிறீர்கள்
எனவே போதிய முன் அவதானமாக இருத்தல் மிக அவசியமாகினறது.
ஆதாரம்:- “உலக சுகாதாரம்” சஞ்சிகை–ஜனவரி 2016

முன் அவதானமான மூத்தோருக்கான முயற்சிகளாவன.
• எமது உடலைத் திடகாத்திரமாக
(Keep fit)பேணுவோம்
• கிரமமான அப்பியாசம் செய்வதனூடாக எமது தசை நார்கள் வலுவடையும்.
• உளச்சம நிலை உயர் நிலையில் பேணுவர் ஆவோம்.
• கிரமமான முயற்சிகள் -
ழ தன்னம்பிக்கை உயர்வடையும் - மகிழ்ச்சியான மன நிலை மேலோங்கும்.
• மூத்தோருக்கு தினம் நடத்தல் உயர் வான அப்பியாசமாகும்.
• சமூகத்துடன் இணைந்த வாழ்க்கை சுகதுக்கங்களில் பங்கு கொள்ளல்.
• இயன்ற உதவியைلل சேவையை இயலாதோருக்கு அளித்தல்.
• நல்லோரின் உறவுلل இணக்கம் நல்வாழ்வுக்கு வித்தாக அமைந்து பயனளிக்கும்.

நடப்பதினால் இதயத்தில் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்கலாம்
• அலுவலகம் தொழிற்சாலைகளில் தினக் கடமைகளை நிறைவேற்றிககொண்டு இல்லம் திரும்புகிறோம்
• சிலவேளை அலுவலக வேலைகளை வீட்டுக்கு எடுத்து வருவதும் உண்டு.
• இதனால் உடல் உழைப்பு எதுவும் இன்றி எமது தினவாழ்க்கை அமைவதுண்டு
• இதனால் சிலவேளைகளில் திடீரென இதயத்தில் ஒரு வேதனை வருவதை உணரலாம்.
• இந்நிலை மிகவும் ஆபத்தான நோயாகும்.
• ஓய்வெடுத்து வீட்டில் முழுநேரத்தைச் செலவிடுவர்களுக்கும் இவை பொருந்தும்

பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றி ஆபத்தைத் தவிர்த்தவர்களாவோம்
• வேலை முடிந்து இல்லம் திரும்பும் போது நடப்பதற்கென்றே அரை மணி நேரத்தை ஒதுக்கலாம்.
• போது பஸ்பிராயாணம் செய்பவராகில் ஒருக்கிலோ மீற்றர் இருக்கும் போதே இறங்கி விடுங்கள். அத்தூரத்தை நடந்தே கடப்போம்.

நடக்கும் முறை

•
நடக்கும் போது தலையை சற்று முன் நிமிர்த்தி வைத்துக் கொள்வோம்

• இடுப்பைச் சற்றுமுன் தள்ளி நடத்தல் விரும்பத்தக்கது.

• இதன் மூலம் உடலில் பின்புறம் சரியான நிலையில் அமைதல் சாத்தியம்.
• முழங்காளில் நின்று அடியெடுத்து வைக்காமல்
இருப்பில் நின்றே அடியேடுத்து வைப்போம்.
அடிக்கடி இதை மனதில் இருத்திச் செயற்படுவோம்.
காலக்கிரமத்தில் இந்நிலை எம்மால் எட்டலாம.;
எவ்விதமான சூழ்நிலையிலும் தினமும் இப்பழக்கத்தை வழக்கக்கமாக்கும்.
ஆறுதலாக நடந்தாலும் அந்நிலை நிச்சயமாக நன்மை பயக்கும்.
அவயங்களிலும் திசுக்களிலும் பலவித மாறுதல்களை ஏற்படுத்துவதை எம்மால் உணர முடியும்.
• தொடர்ந்து நடக்கும் போது முன் நடப்பவர்கள் முந்தி நடக்க முயற்சிப்போம்.
இதன் மூலம் எமது வேகத்தை மேலும் அதிகரித்தவர்களாக அமைவோம்.
படிப்படியாக எமது நடைவேகம் அதிகரிப்பதை எம்மால் உணர முடியும்.
இவ்வேளையில் மாடி வீட்டில் இருப்பவர்களால் மின்தூக்கி பாவனையை நிலையில் தவிர்த்துஇருமாடிகளையாவது படியேறிக் கடப்போம்.
ஒவ்வொரு படியும் நாம் அடையும் வெற்றி எனக்கணக்கிடுவோம்.

• நாம் படிகளில் எறிச் செல்வதால் எமது இதயத்தையும் நுரையீரல்களையும் முழுமையாகப்பயன்படுத்துகிறோம் எனப் பெருமைப்பட முடியும்.
இதன் மூலம் எமது இதயத்தை பாதுகாப்போம்

 

 

 

மூத்தவர்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) கருதுகோளின் படி 65வயது அதற்கு மேற்பட்டவர்களை முதியவர் எனக் குறிப்பிடுவர்
(அ) வயது 65–75 வரை இளையவர் மூத்தவர் எனவும்
(ஆ) வயதி 75ற்கு மேற்பட்டவர்களை மிகமுதுமையானவர் எனக் குறிப்பிடுவர்

எம்மில் நாம் மூப்டையும்போது ஏற்படக் கூடிய தாக்கம் பற்றி அதனிட்டுத் தாம் ஆரோக்கியமாக வாழும் வேளைகளில் சிந்திப்பது மிகவும் குறைவாகும். ஆயத்தங்களை மேற்கொள்வோமாகில் நாம் பாதிப்படையா நிலையைப் பேணியவர்கள் ஆவோம். இதன் மூலம் இறுதி மூச்சு வரை துன்பம் இன்றி வாழலாம்.
மேற்குலக நாடுகளில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால் அரசும் ஏனைய சமூக அமைப்புக்களும் இம்மூத்தோருக்கான அடிப்படை வசதிகளை அவர்தம் அந்திய கால வாழ்க்கையில் ஓரளவு அளித்து வருகிறார்கள் இவ்வாறான வசதிகள் இலங்கையில் இல்லாததால் மூத்தோர் தம்மைத் தாமே பேணுதல் அல்லது ஒருவருக்கொருவர் உறுதுனையாக வாழ நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.
 

ஆரோக்கியமான முதுமை

(Healthy Aging)

உலக சுகாதார ஸ்தாபனப் பிரகடனம் - 1996இல் பின்வருமாறு அமைகிறது. ஆரோக்கியமான முதியவர்கள் குடும்பங்களுக்கும் ஆதாயம் ஆவர். அவர்கள் எவ்வாறு முயற்சிக்கிறார்கள் என்பதற்கு அமைவாகச் சமூகத்திற்கு உதவ முடியும். ஆகவே நாடுகள் ஆரோக்கியமான முதுமை (Healthy Aging)  எய்தலைத் தமது நாட்டின் முன்னேற்றத் திட்டத்தில் முக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும். முதுமை அடையும் மக்களை பிரச்சினையாகக் கருதாது பிரச்சனைக்குத் தீர்வுகாணக் கூடியவர்களாக எண்ணுதல் வேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு எது தேவை என்ன என்பதைப் பற்றியே யோசிக்கிறோம். மேலும் முதன்மையாக அவர்களால் எமக்குத்தரக் கூடிய ஆதாயம் பற்றிப் பார்க்க வேண்டும். தமது முதியோருக்குச் சமூகம் அளிக்கும் அந்தஸ்தையும் ஆதரவையும் வைத்துத்தான் அச்சமூகத்தின் நாகரிக மேன்மை மதிக்கப்படும்.


எமது வாழ்க்கை நிலைமை
எம் வாழ்க்கையில் கால்வாசிக் காலம் வளர்கிறோம். மிகுதிக் கால்வாசிக் காலம் மூப்படைகிறோம். இந்நிலையில் 65வயதை எட்டுவதே பெரும்பாலும் முதுமையின் ஆரம்பமாகக் கருதலாம். ஒருவரின் தோற்றம் மன நிலை, மக்களுடன் பழகும் விதம், சமூகப் பணிகளை முன்னெடுக்கும் பங்கு, வாழ்வியல் முறைகள், பழக்க வழக்கங்கள் முலமானவைகள் மூலம் ஒருவரின் ஆரோக்கிய நிலையைத் தீர்மானிக்கலாம் எமது சுகத்தை தாமே சம்பாதிக்க வேண்டியவர்களாக உள்ளோம். இவற்றைப் பிறிதொருவரினால் தரமுடியாது. பொருளாதார நிலமையை யாரும் கொடுத்து உதவலாம் எனவே இவை தொடர்பாகச் சிந்தித்து சாதகமான பழக்க வழக்கங்களைக் கையாள்;வோமாகில் நாம் நூறு ஆண்டுகளுக்கு மேல்(100) இயல்பு வாழ்க்கை வாழலாம்.


பழக்க வழக்கங்கள் எப்படியாக அமைகின்றன?.
பாலர் பருவத்தில் பெற்றோர், மூத்தோர், குடும்பத்தாரின் முன் உதாரணமான தின வாழ்க்கை முன் உதாரணமாக (சுழடந ஆழனநட) அமைகின்றது. குறிப்பாகத் தாய்மாரின் வாழ்க்கை அடிநாதமாக அமையமுடியும்.

உதாரணமாக இரவு நித்திரைக்குப் போகும் முன் பல் தீட்டுவதன் மூலம் பற்சூத்தை, முரசுவியாதி முதலானவைகள் சம்பவிப்பதைத் தவிர்த்தவர்களாவோம். தாய் முன் மாதிரியாக நிற்பராகில் குழந்தைகளும் அந்நிலையைப் பின் பற்றுவர்.

இவை தொடர்பான சமூக விழிப்புணர்ச்சி அவசியமாகும்
குறிப்பிட்ட அம்சம் செய் முறையில் அமைய வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் போது அவை எமக்குப் பழக்கவழக்கமாக அமைந்து விடுகின்றன. தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்நிலை எமது நடத்தையால் பரிணமிப்பதைக் காணுகின்றோம்.

எம்மவர் காலையில் பல் தீட்டுகிறோம். இனிப்பு சேர் உணவு அடிக்கடி உண்ணுதல். இனிப்புச் சேர் மேன்மையான பாவனை தேநீர் பருகுதல் முதலியன பற்களில்; பல் மிளிரியை அழிப்பதனால் பல் முரசு வியாதிகளுக்கு இலக்காகின்றனர். தற்போது 80–90 மேலாக மூத்தோர்لل மாணவர் அடங்கலானோரின் பற்கள் பாதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். சீரான பழக்க வழக்கம் உள்ளவர்கள் 80–90 வயதிலும் எல்லாப் பற்களையும் சரிவர நன்றாகப் பெற்றிருப்பதை இன்றும் காண்கிறோம்.

நாம் அக்கறை கொள்ளாத

மூத்தோர் பிரச்சினைகளாக அமைவன….


1. உணவு சீரணிப்பதில் சிரமம்
2. பசியின்மை – வயிறு எரிவு – வயிறு பொருமுதல்
3. நிறை குறைவடைதல்
4. மூட்டுளைவு – குறிப்பாகக் கால்
5. உள்ளங்கால் எரிவு – விறைப்பு
6. உணவைச் சப்பிமென்று விழுங்குவதில் சிரமம்
7. தாகம் குறைவு
8. மலம் கழிவதில் சிரமம்
9. தோல் உலர்வு
10. உடலில் தோற்கடி – சொறி பரவுதல்
11. நடப்பதில் சிரமம்; - தள்ளாடுதல்
12. உடல் அசதி – குருதிச் சோகை
13. நித்திரையின்மை
14. தனிமை மேலோங்கல்لل நாடல்;
15. கோபம் - வெறுப்பு
16. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் பொருட்படுத்தாமை
17. மனத்தாக்கம்
18. அடித்து உடைக்கும் மனநிலை
19. யாருடனும் உரையாட விருப்பமின்மை
20. தற்கொலைச் சிந்தனை மேலோங்கல்
21. சீராகச் சுவாசிக்க முடியாமை
22. மனம் ஒரு நிலையில் இல்லாமை, சஞ்சலம்
முதலியன இiயாவும் எமது தின வாழ்க்கையுடன் தொடர்பான அம்சங்களாக அமைவதைக் காணலாம் இவற்றைச் சாதகமானதாக அமைத்தல் அடிப்படைத் தேவையாகும்.


இவை தொடர்பான சமூக விழிப்புணர்ச்சி எம் அனைவருக்கும் நிச்சயம் வேண்டும்.


கற்க கசடறக் கற்பவை
கற்றபின் நிற்க அதற்குத் தக

 

 

தொடர் கருமம்
தொடர்ச்சியாக ஒரு கருமத்தைச் செய்யும் போது அது பழக்க வழக்கமாக அமைந்து விடுகின்றது. இப்பழக்க வழக்கம் நாளடைவில் நடத்தையாக அமைவதைக் காண்கின்றோம். எம்முன்னோரின் முன் உதாரணமான வாழ்க்கை நாம் வாழ்ந்த சூழல் அவர்களின் பழக்கவழக்கம் முதலானவைகள் யாவும் எமது நாளாந்த வாழ்கையில் அமைந்திருப்பதைக் காணலாம்.

நிலத்தியல் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு – திருக்குறள் 452

நடத்தைக்கோலம்
நிலத்தின் இயல்புக்குத் தக்கபடி நீரின் குணம் மாறும். அதுபோல மக்களின் அறிவு அவர்களைச்; சேர்ந்துள்ள இனத்தின் இயல்பை உடையது. மண்ணின் தன்மைக்கேற்ப அதில் ஊறும் நீரின் ரசனை அமைவதைக் காணுகின்றோம். அதேபோல எமது குண இயல்பு நடத்தைக்கோலம் யாவும் நாம் வளர்ந்த சூழலுக்குத் தக்கதாக அமையும்.

எமது சொற் பிரயோகம்لل முகபாவனை அங்க அசைவுلل எமது பண்பியல் யாவும் இவ்விதமாக அமைவதைக் காண்கிறோம். எமது பழக்க வழக்கம் ஆரோக்கியத்துக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் அமைவதுண்டு. கல்வி முயற்சி மூலம் எமக்கு பாதகமான அம்சங்களைச் சாதகமாக அமைப்பதனூடாக இயல்பு வாழ்க்கையையுடன் இணைந்து வாழலாம்.
பின்குறிப்பிடப்படும் பாதகமான பழக்க வழக்கங்கள்

ஆரோக்கியமான மூத்தோரின் இயல்பு வாழ்க்கைக்குக் குறுக்கீடாக அமைவதை அவதானிக்கலாம்

 இரவில் சீராக நித்திரை கொள்ள முடியவில்லை.
 மனதை ஒன்று குவிக்க முடியவில்லை. எளிதில் சினம் அடைகிறேன்.
 கோபாவேசம் அடையும் போது கையில் இருபதை அடித்துடைக்கும் மனநிலமை ஏற்படுகிறது.
 யாருடனும் இன்முகம் காட்டி உரையாட முடியவில்லை.
 வீட்டை விட்டு வெளியில் போக விருப்பமில்லை
 தனிமையுணர்வு மேலோங்கி நிற்கிறது.
 எல்லாம் இருந்தும் வெறுமை உணர்வு மேலோங்கிறது.
 சிலவேளைகளில் நெஞ்சு பதறுகிறது.
 வயிறு பொருமுதல்لل நெஞ்செரிவுلل பசியின்மை முதலானவைகள் சம்பவிக்கிறது.
 இடையிடை தற்கொலைச் சிந்தனையும் ஏற்படுகிறது.
 உள்ளங்கால் எரிவுلل விறைப்பு கடந்த மாதங்களாக இருக்கிறன.
 கால் மூட்டுகள் உளைவுلل கைகால்கள் உளைவ ஏற்படுகின்றன.
 கிட்டிய தூரங்களைக்கூட என்னல் நடக்க முடியவில்லை.
 மூச்சு வாங்கிறது மூச்செடுக்கக் கஸ்டமாக இருக்கிறது.
 உடற்பருமனைلل எடையைக் குறைக்குமாறு கிளினிக்கில் சொல்கிறார்கள்.
 சாப்பாட்டில் விருப்பமோلل நாட்டமோ இல்லை
 நேரத்தை எப்படிக் கழிக்கலாம்لل செலவிடலாம் என ஏக்கமாக இருக்கிறது
 என்மனைவிلل பிள்ளைகள் எனது பேச்சை பொருட்படுத்துகிறார்கள் இல்லை.
 இதனால் அவர்களை வாயில் வந்தபடி பேசி விடுகிறேன்.
மூத்தோரின் இயல்பு வாழ்க்கைக்குக் குறுக்கீடான இன்றைய சூழல்கள்;….. இன்னும் பல….
என்பேச்சு உமக்கு ஏறாது.!!!

 என் மனைவி பேரப்பிள்ளையைப் பார்க்க கனடா போன பின்பு
எனது மன உளைச்சலை யாரும் விளங்குகிறார்கள் இல்லை.

 கணவன் மனைவியான எங்கள் இருவரையும்
வயதான இவ்வயதில் ஒரு இடத்தில் இருக்க விடுகிறர்கள் இல்லை.

 எனது மனைவி காலமாகி மூன்று வருடங்களாகின்றன
என் மன நிலையை மக்களோلل பேரப்பிள்ளைகளோ சரிவர விளங்குகிறார்கள் இல்லை.
 எனக்கு 5 பிள்ளைகள் யாவரும் வெளிநாட்டில்
தலைநகரில் மூத்த மகள் வாங்கிய வீட்டில் நானும் மனைவியும் இருக்கிறோம்
ஆனால் இருவரும் தனித்தனியே சமைத்து உண்ணும் பரிதாபம்

 எனக்கு சகோதரர், பிள்ளைகள் இருக்கிறார்கள் மனைவியை இழந்து விட்டேன்.
ஆனால் என்னை ஆதரிக்க யாரும் முன்வருகிறார்கள் இல்லை
நானே உணவை ஆக்கி உண்ணுகிறேன்.

 நான் போதை குடிவெறிக்கு இலக்காகி விட்டேன்
வெளியேற முடியவில்லை

 கடந்த 30 வருங்களாக சிகரெற்; புகைக்கிறேன்
வைத்திய ஆலோசனையில் புகைத்தலை விலக்குமாறு எச்சரித்தனர்.
தொடர்ந்தேன் இன்று தொண்டைப் புற்றுநோய்க்கு இலக்காகி விட்டேன்

 மனைவி மக்களை வாயில் வந்த படி ஏசக்கூடாது என்னும் எண்ணம்.
ஆனால் என்னை மிஞ்சிய கோபம்
மகனைப் பார்த்து எங்கேயாகும் தொலைந்து போ என ஏசிவிட்டேன்.

 நான் ஒரு சலரோக நோயாளி.
கடந்த ஒன்பது வருடங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறேன்
எண்ணெயில் வேகத்தை உணவுلل இனிப்புணவு வகைகளை விலக்குமாறு வைத்திய ஆலோசனை ஆனால் என்னால் அதை அனுசரிக்க முடியவில்லை
தற்போது எனது வலது கால் பெருவிரல் சத்திர சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

 எனக்கு இப்போது 79 வயது தனியர் மூத்தோர் விடுதியில் இருக்கிறேன்
பிள்ளைகள் ஒருவரும் இல்லையே இந்நாட்டில் இல்லை.
எனது மிகுதிக்காலம் எப்படிக் கழியப்போகிறது என ஒரே பயமாக இருக்கிறது.
பலவித உள்ளக்குறல்களின் பட்டியல் இன்னும் பல

மூத்தோரின் வாழ்க்கைக்குக் குறுக்கீடான இன்றைய சூழல்களின் தீர்வுகள் சில……
ஈடுகொடுக்கும் வழிமுறைகள் முக்கிய செய்திகள்
 உடலை உறுதி செய்து வாழ்வோம்.
உடல் உழைப்பு அப்பியாசம் எழிமையான நிறை உணவு.
காய்கறி இலைக்கறிلل பழங்கள் சேர்ந்த பொருள் சேர் உணவு உட் கொள்வோம்.
போதியளவு நீர், இளநீர் (குiறாமல்) பருகுவோம்.
மனதை ஒன்று குவித்தல் யோகாசனம் பிராணாயாமம்لل ஜெபம்لل தியானம்لل இவைகளில் பொருத்தமானவற்றில் ஈடுபடுவோம்.

 சமூகத்துடன் இணங்கி வாழ்தல் -
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே – திருமந்திரம்

 குடும்ப உறவைச் செழுமை சேர்ப்போம் -
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றும் இல்லை

 நேரத்தை முகாமை செய்வோம் - மற்றவர்கள் துக்கங்களில் பங்கு கொள்வோம் எமக்கு பழக்கப்பட்ட முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவோம்

 எம்மால் இயன்ற சேவையை இயலாதவர்க்கு உதவுவோம்
எமது பிறவிப்பயன் இதுவேயாகும்

 வாசிப்பதன் மூலம் மனிதன் முழுமையடைகிறான்.
கலை கலச்சார நிகழ்வுகளில் ஈடுபாடு.

 வைத்திய ஆலோசனையை சீராகக் கடைப்பிடிப்போம் -
ஒரு நீரிழிவு நோயாள் 5 6 வருடங்கள் அந்நோயுடன் வாழ்ந்துள்ளர்.
இதன் மூலம் தவிர்ப்போம்
மற்றவர் பேச்சுக்கு ஈடுபாட்டுடன் செவிமடுக்கும் ஆற்றலை பார்ப்போம்

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 Web Master: K.Kamalasekaram-கமலம்

 Email: kamalamnet@gmail.com - kamalam

 0094 77 6636596, 0094 212213150