Home Geriatrics Centrinerians   History Members Committee President Articles EX.BANKERS NORTHERN.BANKERS
  முகப்பு   முதியோர்     சதஞ்சீவிகள்   விபரம் அங்கத்தவர் நிருவாகசபை

தலைவர்

கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
     

 

 

 

 

 

 

நடராஜா சிவரட்ணம்

என்னைப்பற்றி.....................

இலங்கையின் வடபால் அமைந்துள்ள சாதனைகளையும் வரலாற்று நிகழ்வுகளையும் கொண்ட வல்வெட்டித்துறை நகரின் ஆதிகோவிலடி எனும் ஒரு கிராமத்தில் 25.02.1950ம் ஆண்டில்  நடராஜா சிவரட்ணம் ஆகிய நான் பிறந்தேன்.

 

எனது தந்தையார் பெயர் வடிவேல் நடராஜா.

தாயாரின் கன்னிப்பெயர் சின்னையா வள்ளியம்மாள்.

 

எமது பெற்றோருக்கு 7 குழந்தைகள். மூத்தவராகிய ஒரேயொரு பெண் சகோதரியுடன் பிறந்தோம். இதில் எனது ஒரு மூத்த சகோதரன் சிறு வயதிலேயே அகாலமரணமாகி விட்டார். நான் பிறந்த இவ் ஆதிகோவிலடியில் ஏறக்குறைய 100 வீதமானவர்களும் தமது ஏழ்மையின் நிமித்தம் சுயதொழிலையே புரிந்து வந்தனர்.

 

இதனால் பிள்ளைகளை கல்வியில் நாட்டம் கொள்ள ஊக்கமளிக்காது பதுமவயது ஆண்குழந்தைகளையும் தமது தொழிலிலேயே ஈடுபடுத்தி தம் குடும்பச் செலவுகளை சமாளிக்க வேண்டியிருந்தது.

 

இதற்கு விதிவிலக்காக எனது பெற்றோர் எம்மை கல்வியில் ஊக்குவித்தனர். இதன் விளைவாக நான் எனது கல்வியை G.C.E O/L வரை தொடரக்கூடியதாக இருந்தது. இருந்தபோதும் எனக்கு சரியான வழிகாட்டல் இல்லாதிருந்தமையால் G.C.E O/L தரத்தில் 3 துறைகளிலும் அதாவது சாதாரண தரத்தில் அப்போ நிலவிய கலை (Arts), வர்த்தகம் (Commerce). விஞ்ஞானம்(Science) ஆகியவற்றில் சமஸ்கிருதம் உட்பட 21 பாடங்களில் சித்தி பெற்று இம் மூன்று துறைகளிலுமே G.C.E A/L தரத்திற்கு தகுதியடைந்தேன்..

 

தாரமும் குருவும் தலைவிதிப்படி’ என்பதற்கிணங்க எனக்கு சரியான ஆசான் கிடைக்காமையினால் வங்கியில் இணைந்த பின்பே ஆங்கிலத்தில் (English language G.C.E O/L) சித்தியடைந்தேன்.

 

பிற பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் கல்வி கற்று இத்தகுதிகளை அடைந்த நான் மீண்டும் சிதம்பரக் கல்லூரிக்கு வந்தபொழுது முதலில் O/L Science ற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதும் எனக்கு இப்போது G.C.E O/L விஞ்ஞானப்பிரிவில் படிக்க அனுமதி தந்தனர்

 

தொழில் வாய்ப்பு

G.C.E A/L இல் விஞ்ஞானப்பிரிவில் 1969ல் முதலாம் ஆண்டில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை குடும்பத்தின் நிதிநிலையை மனதில் கொண்டே வேலைவாய்ப்பு சிந்தனையுடன் கல்வியில் ஈடுபட்டிருந்தேன். அதனால்; அடிக்கடி வல்வெட்டித்துறை தபாற் கந்தோருக்கு சென்று அரசாங்கத்தினால் வெளியிடப்படும் வர்தமானியை (Gazette) பார்ப்பதுண்டு.

இந்நாட்களில் மூன்று அரச வேலைகளுக்கு நான் தகுதி பெற்றிருந்தேன். எனவே நான் மூன்றிற்கும் விண்ணப்பித்தேன்.

அவையாவன

உதவித் தபாலதிபர்                      (Assistant Post Master)

கச்சேரியில் சிறாப்பருக்கு உதவியாளர்    (Assistant to Shroff at Kachcheri)  

இலங்கை வங்கியில் காசாளர்/லிகிதர்    (Clark/- Cashier Bank of Ceylon).

 

இம் மூன்றிற்குமே நான் தெரிவு செய்யப்பட்டேன். இந்நிலையில் வல்வெட்டித்துறை East Road இல் வசித்த எனது சாரண ஆசிரியரான R.இராசநாயகம் அவர்களிடம் சென்று ஆலோசனை கேட்டபோது அவர் மிக ஆணித்தரமாக வங்கியில் இணையுமாறு அறிவுரை கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து 1970 மே 16ம் திகதி இலங்கை வங்கியில் காசாளராக (Cashier) இணைந்து கொண்டேன். இந்த ஆண்டிலிருந்து நான் வங்கித்துறையில் ஆர்வம் கொண்டேன். இலங்கையில் பல பாகங்களிலும் பணிபுரிந்து வங்கி உப முகாமையாளர் (Sub.Manager) வரை பதவி உயர்வுபெற்று 1984ஆம் ஆண்டு யாழ்மாவட்டம் வந்து எமது ஸ்ரான்லி வீதிக் கிளையில் முகாமையாளராக கடமைபுரிந்து கொண்டிருந்த வேளையில் என் உள்மனதில் ஏற்கனவே ஆழப்பதிந்திருந்த உயர்கல்வி ஆசை என்னை இறுகப்பற்றிக் கொண்டது.

 

இக்காலகட்டத்தில் என்னுடன் சுன்னாகக் கிளையில் பணிபுரிந்த எனது மதிப்பிற்குரிய

நண்பர் (அமரர்) பொன்.பாலகுமார் அவர்களின் தூண்டுதலாலும்

வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை அவர்களின் உதவியுடனும் வெளிவாரிப்பட்டப் படிப்பை (A/L தராதரம் இல்லாதிருந்த போதும் அதைவிடக் கூடிய தராதரம் உள்ள வங்கியியல் பரீட்சையில் நான் தகுதி பெற்றிருந்தமையால்) கற்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் பின்வரும் கல்வித்தகைமைகளை அடைந்தேன்.

Academic Qualifications

1.Bachelor of Arts- B.A      (General Degree – 1997) at the age of 47 years

2.Post Graduate Diploma in Public Administration     (Merit pass – 2001 ) at the age of  51 Years

ஆகிய கல்வித்தகைமைகளைப் பெற்று நீறுபூத்த நெருப்பாக இருந்த எனது உயர்கல்விகளை நிறைவேற்றி சர்வகலாசாலையில் ஏனைய எனது பிள்ளைகளுக்குச் சமனான வயதுடைய மாணவர்களுடன் பட்டமளிப்பு விழாக்களிலும் கலந்து எனது வேட்கையை நிறைவேற்றினேன்.

Professional Qualifications in Banking

1.    Associate Member of the Bankers’ training Institute (AIB)

   இலங்கை வங்கியாளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட வங்கியியலை பூர்த்தி செய்ததிற்கான சான்றிதழ்.

2.    Fellow of the Institute of Bankers’ (FIB)

    இலங்கையில் வங்கியியலுக்கு அதியுயர் சேவைகளைப் புரிந்தமைக்கான உயரிய குழுவின் அங்கத்தவராக        கௌரவப்பட்டம்.   வடமாகாணத்தில் முதன்முதலில் இந்தப் பட்டம் வழங்கப்பட்ட இருவருள் நானும் ஒருவன்.

     மேலும்

3.     OUT STANDING BANK EMPLOYEE FOR THE YEAR -2002

         Honored by “ Northern Province Banks’ Pensioners’ Welfare Association"    மேற்படி விருதையும் பெற்று          கௌரவிக்கப்பட்டேன்.

    அத்துடன்

4.     MOST OUTSTANDING PROFESSIONAL FOR THE YEAR 2008

    எனும் சான்றிதiழும் ‘CENLEAD என்ற Center for Leadership Excellence and Personality Development

        எனும் Colombo சார் நிறுவனத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்.

 

வங்கித் தொழிற்துறையில்

இலங்கை வங்கியின் வடமாகாண உதவிப் பொதுமுகாமையாளராக

(Assistant General Manager – Northern Province (AGM-BOC-NP))

எனது 60வது வயதில் அதாவது 40 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த மனநிறைவுடன்

எமது ஊருக்காகவும் பொது நலன்களிற்காகவும் பணிபுரிவதில் தற்சமயம் ஈடுபட்டுள்ளேன்.

 

CAREER DEVELOPMENT in Bank Of Ceylon

1970 – 1976        –       Assistant Cashier

1977- 1983         –        Grade IV Officer(Supervisor)

1984- 1988         –        Sub Manager (Grade III ,III)

1989- 2002         –        Assistant Manager

2002- 2004         –        Area Manager

2004-2007           –        Chief Manager (O.M’s Grade)

2008-2010           –        Assistant General Manager (AGM)

 

எனது வாழ்க்கைப் பயணத்தை இருபெரும் பகுதிகயாக பிரிக்கலாம். அவையாவன :
1.
வங்கியாளனாக (As a banker)
2.
சமூக சேவகனாக (As Social Worker)

 

இவ்விரு பயணங்களிலும் எனக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர்களை

நினைவு கூருதல் எனது கடப்பாடாகும்.

எனது வங்கி வாழ்க்கைக்கு குருவாக இருந்தவர்களுள்

முதன்மையானவர் அமரர் மு.சிவகணநாதன்

இலங்கை மத்திய வங்கி ஆளுனரின் ஆலோசகராக இருந்தவர். (Former, Advisor  to the Governor of Central Bank )

மற்றும்

Mr.B.J Vincent(Retried AGM –BOC)

Mr.K.Balasubramaniam (Retried AGM-BOC-NP)

Mr.B.A.Arumainayagam (Retried AGM-BOC-NP) என்போரை குறிப்பிடலாம்.

 

அதே போல எனது சமூக வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள்

எமது ஊரைச்சேர்ந்த

அமரர்களான திரு.S.ஞானமூர்த்தி (J.P & Ex. Chairman of V.V.T-U.C) மற்றும்

வல்வையின் பிரபல்யங்களில் ஒருவரான AGA என அறியப்படும்

திரு.ஏ.வேலும்மயிலும் போன்றவர்களாவார்கள்.

 

எனது கிராமமாகிய ஆதிகோவிலடியில் ஒரு கல்வியாளனாக நான் இனங்காணப்பட்டதான ஒரு தோற்றம் நிலவிய போதும் எனக்கு அடுத்த படியாக

எனது இளைய சகோதரர் நடராஜா அரியரட்ணம் (B.Ed- Colombo University, M.Ed & Rtd D.E.O) என்பவர்

1970களில் பட்டதாரியாகி கல்வித்துறையில் ஆசிரியராக இணைந்து கோட்டக்கல்வி அதிகாரியாக ஓய்வுபெற்று தற்பொழுது கனடாவில் வசித்து வருகின்ற இவர் ஒரு தீவிர முருக பக்தனாவார்.

தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் பற்றிய பல நூல்களை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றார்.

 

இல்லறவாழ்வு

நான் 1978ம் ஆண்டு எமது ஊரிலிலேயே சிவலிங்கம்(மகாலிங்கம்) அருந்ததி தம்பதிகளின் புதல்வி

நளினி(வசந்தி) என்ற பெண்ணை திருமணம் புரிந்தேன். எங்களுக்கு 3 குழந்தைகள்.


        1.
மூத்தவர்    – (புதல்வி)   திருமதி பிரதீபா சசிகுமார் (ஆசிரியர்)
        2.
இரண்டாவது – (புதல்வன்) சி.சாருபன்  (தொழிலதிபர்)
        3.
மூன்றாவது  - (புதல்வி)   சி.காருண்யா (வங்கி உதவி முகாமையாளர்)

 

சமூகத் தொண்டில்

Extra Curricular Activities in Social Service   

Positions still holding

          Positions held

A. Committee Member(Treasurer) People Peace  Committee of Jaffna

1. Treasurer   Science Association University of Jaffna

B. Founder member  Jaffna Managers Forum & the Chairman

2. Treasurer Development Society District Hospital Valvettiturai

C.  Life Member Professional Association of Bankers’ (S.L)

3. Patron Valvai Ondriyam Valvettiturai

D. President & Presently  the Immediate Past President of the

    BOC Pensioners’ Association Jaffna Distric

4. Authorised Counselor for Institute of Bankers’ (IBSL)

    Sri Lanka

E. Co.ordinator MR.K.Sivagananathan’s Memorial fund – Colombo

5.Treasurer Regional Center for Jaffna District (IBSL)

F. International Co-Ordinator Valvai Seaman Welfare Association

   VAISWA

6. Ex- President of All Bankers’ Association

    Jaffna District

G. Sub Editor of “ETERNAL Banker” Magazine of  BOC Pensioners’

   Association Jaffna District

7. Ex- President of BOC  Jaffna District Employees’ Sports & Welfare Association