Home Geriatrics Centrinerians  History Members Committee President Articles EX.BANKERS NORTHERN.BANKERS
    முகப்பு     முதியோர்       சதஞ்சீவிகள்       விபரம்      அங்கத்தவர்     நிருவாகசபை        தலைவர்    கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
 
Centenarians in North Sri Lanka  -    ஸ்ரீலங்கா வடக்கின் சதஞ்சீவிகள்

Centenarian. Mr.Veluppillai Nagalingam

101 வயதில்

        சதஞ்சீவி. திரு.வேலுப்பிள்ளை நாகலிங்கம்   

1918-04- 07  - 101yrs

 

 

 

 சதஞ்சீவி-Centenarian  உயர்திரு.வேலுப்பிள்ளநாகலிங்கம்

 (NIC.1918 098 10019)  அவர்கள்

1918ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி

இலங்கை மண்ணில் வடபகுதியில் சுண்ணாகத்தில் உதித்தார்.



சுண்ணாகம், சுண்ணாகம் கிழக்கு, குமாரகோட்டம் இல்லத்தில் வாழ்ந்துவரும் அவர்கள்

இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி (2018-04-07) தமது 100வது வயதினைப் பூர்த்தி செய்து

101வயதில் காலடி வைத்து வடமாகாணத்தின் சதஞ்சீவிகளில் ஒருவராக புகழ்பெற்றுள்ளார்.

 

வலிகாமம் தெற்கு பிரதேச சபை பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதிய ஓய்வூதியர்கள் 10.03.2018 அன்று நடந்த 17வது ஆண்டு வருடாந்த பொதுக் கூட்டத்தில் 100வயதினை பூர்த்தி செய்த சதஞ்சீவி--Centenarian உயர்திரு. வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்களை பாராட்டிக் கௌரவித்தார்கள்.
 


சுண்ணாகத்தில் திரு.க.வேலுப்பிள்ளை திருமதி.வே.சின்னம்மா தம்பதியினருக்கு மகனாக இவர்

திருமதி. வள்ளிப்பிள்ளை அவர்களை துணைவியாக கொண்டிருந்தார்.

 

 

 

இத்தம்பதியினருக்கு ஒரு மகனும்; ஒரு மகளும் பிறந்திருந்தார்கள்.

மகன் 1981ல் அகால மரண மடைந்துவிட்டார்.


மகள் ஆயள்வேத வைத்தியராகி கடமையாற்றி

தற்போது ஓய்வு பெற்று தந்தையை கவனித்து வருகிறார்.

 

 

புகையிரத திணைக்களத்தில் ஆரம்பத்தில் உதவி எஞ்சின் சாரதியாக இணைந்தவர்

பின்பு எஞ்சின் சாரதியாக பதவி உயர்ந்து சேவையாற்றி 1973ல் ஓய்வு பெற்றார்.

கொழும்பு, காங்கேசன்துறை,  திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் சேவையாற்றி

தமது சேவையில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு மிக்கவராக கடமையாற்றி

பல சிறப்புக்கள் பாராட்டுகள் பெற்றார்.

1947ல் கடமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் புகையிரத உத்தியோகத்தர்களின் பெருந்தொகையான சம்பளப் பணம் களவாடப்பட்டு புகையிரதப் பாதையில் வீசப்பட்டிருந்ததை அவதானித்த இவர்

அதனை மீட்டெடுத்து உரிய இடத்திற்கு கையளித்திருந்தார்.

 

இந்த அரிய சேவையை துணிவுடன் செய்தமைக்காக அப்போதிருந்த பிரிட்ட  அரசாங்கத்தால் சிறந்த உத்தியோகத்தர் எனப் பாராட்டப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்..

ஓய்வுநிலை ஆயள்வேத வைத்தியரான மகளுடனும்;

நல்லூர் பிரதேச சபை பிரிவின்

சுகாதார வைத்திய அதிகாரியான மகள் வழிப்பேரனுடனும்,

யாழ் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தரான பேத்தியுடனும், 

யாழ் இந்துக்கல்லூரி மாணவனான பூட்டனுடனும்

சுண்ணாகம் கிழக்கு, குமாரகோட்டம் இல்லத்தில்

உடல் தளர்ந்த நிலையிலும் கடவுள் பக்தியுடன் பலருக்கு உதவிகள் செய்து

மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

தகவல்: திரு.சிறில் சுகந்தரன்.
செயலாளர்,

பகிரங்க சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம்
வலிகாமம் தெற்கு பிரதேச செயலகம்.