Home Geriatrics Centrinerians  History Members Committee President Articles EX.BANKERS NORTHERN.BANKERS
    முகப்பு     முதியோர்       சதஞ்சீவிகள்       விபரம்      அங்கத்தவர்     நிருவாகசபை        தலைவர்    கட்டுரைகள்  முன்.வங்கியாளர்    வடமாகாண வங்கியாளர்
 
Centenarians in North Sri Lanka  -    ஸ்ரீலங்கா வடக்கின் சதஞ்சீவிகள்

Centenarian. Mr.Kathirithamby Elayathamby  

101 வயதில்  

         சதஞ்சீவி. திரு.கதிரித்தம்பி இளையதம்பி   

1915-12-24    - 103yrs

 

  

 

சதஞ்சீவி-Centenarian  

கதிரிதம்பி இளையதம்பி அவர்கள்

1915ம் ஆண்டு மார்கழி மாதம் இருபத்திநாலாம் திகதி 

இலங்கை மண்ணில் வடபகுதியில் கிழவிதோட்டம், கரவெட்டி மத்தி, கரவெட்டியில் உதித்தார்.

 
2015 மார்கழி 24 அன்று 100வது பிறந்த தினத்தை ஒட்டி

ஒரு சிறப்பு நன்றி செலுத்தும் ஆராதனை கட்டைவேலி மெதடிஸ்த ஆலயத்தில்

உறவினர்கள் நண்பர்கள் என 150க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டாடப்பட்டது.
;.
தந்தை : கணபதிபிள்ளை கதிரித்தம்பி
தாய்   : வீரகத்தியார் பத்தினி


குடும்பத்தில் ஏழாவது பிள்ளை.


சகோதரர்கள் நான்கு

சகோதரிகள் நான்கு


மெதடிஸ்த திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்றவர்
விவாகம் : 1946 ஆவணி  22


துணைவியார் : மார்கரெட் மின்னொளி
பிறப்பு      :- 1920. 04. 20,

காலமானது :-  2002. 01.16.
துணைவியார் தந்தை ஆழ்வார் சின்னக்குட்டி
துணைவியார் தாயார் எலன் ஆசைப்பிள்ளை

பிள்ளைகள் இருவர்
    மகன் 1948ல் - ரவீந்திரன்

    மகள் 1958ல் நீற்றா நிர்மலா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

லண்டன் கேம்ப்ரிட்ஜ் சீனியர் வரை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியில் படித்து

18 வயதில் தபால் திணைக்களத்தில் இணைந்து தபால் அதிபராக உயர்வு பெற்றார்.

 

இலங்கையின் பல இடங்களிலும் பணியாற்றி கடைசியாக

திருகோணமலையில் இருந்த பொழுது

இன்னும் முன்னேற வாய்பிருந்தும் வேலை செய்யமுடியாதபடி

கையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக

அரச கரும மொழி சட்டத்தில் இருந்த சலுகையை பயன்படுத்தி

1963ல் 48வயதில் ஓய்வு பெற்றார்.

 

வீட்டில் இருந்தாலும் சமூகப் பணி, கிராம முன்னேற்ற

சங்கம் என்பவற்றில் ஈடுபாடு. அரச உயர் அதிகாரிகளுக்கும் நாடாளுமன்ற உறுபினர்களுக்கம் கிராமத்தின் தேவைகள் பற்றி ஓயாமல் கடிதங்கள் எழுதுவதும் அவர்களை நேரில் சென்று பார்ப்பதும்.

 

கரவெட்டி கிழக்கு பகுதிக்கு உயர்திரு .ராசலிங்கம் பா.உ. அவர்களின் அனுசரணையுடன் மின் இணைப்பை பெற்று கொடுத்ததில் இவருக்கும் ஒரு பெரிய பங்கு உண்டு.

 

சிறு பிள்ளைகளுக்கு ஆங்கிலம்  இலவசமாக கற்று கொடுப்பது ஒரு பொழுது போக்கு. ஆழ்ந்த தமிழ் பற்று உள்ளவராக இருந்தாலும் ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்தவர்.

 

எவரும் சொந்த ஊரை விட்டு பிற நாடுகளில் வதிவதை விரும்புவது இல்லை. தற்போது பிற நாடுகளிலில் இருப்பவர்கள் எப்போவாதவது திரும்பி வரவேண்டும் வருவார்கள் என்ற எதிர்பார்போடு இருப்பவர்.

 

இவரை திருச்சபை காரியங்களில் ஈடுபட வைத்ததில் அருட்பணி. எஸ். கே. கதிர்காமருக்கு ஒரு பெரிய பங்கு உண்டு. கதிர்காமர் போதகர் கட்டைவேலிக்கு வந்தபின்தான் அதிகளவாக திருச்சபை நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பித்தார்..

 

சிறுவர் இல்லம் செயலாளர்/பொருளாளர், சபை உக்கிரணகாரர், சபை கணக்காய்வாளர் என்பன அவர் வகித்த பதவிகள்.

 

இன்றும், வெளியே செல்லாவிடினும் வீட்டிற்குள் தனது கருமங்களை தானே பார்க்கின்றார். துணையாக மகள் இருக்கின்றார். சிறு வயதிலிருந்தே கண்டிப்பாக அசைவ உணவை தவிர்துகொண்டவர். 

 

இலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகமும் வடமாகாண ஓய்வூதியர்கள், முதியோர்கள்  யாவரும்

சதஞ்சீவி-Centenarian கதிரிதம்பி இளையதம்பி

மேலும் நீண்ட ஆயுளுடனும் நலமுடனும் வாழவேண்டுமென அனைவரது சார்பிலும் வாழ்த்துகிறோம்